பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி அக்.27 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக கடந்த ஆண்டு வேலை நாளை விடுமுறை நாளாக அரசு அறிவித்தது. அதேப்போன்றதொரு எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால் சனிக்கிழமை பள்ளி நாள் ஆகும், தீபாவளிக்கு மறுநாள் நோன்பு திங்கட் கிழமை வருகிறது.

வெளியூருக்குச் செல்பவர்கள் குறைந்தப்பட்சம் 3 நாட்கள் விடுப்பு தேவைப்படும் இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை இன்று விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

தீபாவளிக்கு முந்தைய நாளான 26-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை. பள்ளி கால அட்டவணைப்படி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் அக்., 26, 27 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை. அக்., 28-ம் தேதி வேலைநாள் என்பதால், அந்த நாளில் விடுமுறை விட விரும்பும் பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அனுமதிப்பெற்று விடுமுறை விடலாம்.

அவ்வாறு வேலைநாளில் விடுமுறை விடும் பள்ளிகள், ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Diwali holidaysSchoolsSchool departmentAnnouncementபள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறைபள்ளிக்கல்வித்துறை




Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post