இன்ஜினியரிங் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்து முறையாக கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் என கல்லுாரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள கடிதம்:அனைத்து சுயநிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும் தமிழக அரசின் கல்வி கட்டண கமிட்டி சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தேசிய அங்கீகார அமைப்பின் அனுமதி பெற்ற பாடப் பிரிவுகளுக்கு 27 ஆயிரத்து 500 ரூபாயும் மற்ற பாட பிரிவுகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.இந்த கட்டணத்தை 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருத்தப்பட்ட கட்டணத்தை கல்லுாரிகள் வசூலித்து கணக்கு தணிக்கையை முறையாக செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags
Engineering News