இந்த அறிக்கை மீதான கருத்துகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை உண்டாக்கியது.
உலகின் மிக அரிய வீடியோக்களில் இதுவும் ஒன்று..! நொடி பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரிக் ஷா...
இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த வரைவு திட்டம் தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் அளித்து, வரும் நவம்பர் மாதம் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், வரைவு திட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. நவம்பர் மாதத்தின் மத்தியில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர்
இதற்கிடையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பல்வேறு மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி என்ற அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் 6 முதல் 12 வரையிலான வகுப்பினர் இந்தியாவின் பழமையான மொழி மற்றும் அதன் இலக்கியங்களை தேர்வு பாடமாக எடுத்து படிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே புதிய கல்வி கொள்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Tags
kalvi news