IAS, IPS தேர்வு குறித்து புதிய அறிவிப்பு!


2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் 
தேர்வு குறித்து பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத விண்ணப்பிக்கின்றனர். ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு முறை மூன்று நிலைகளாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதல் நிலை தேர்வில் விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவார்கள். 


இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்படும். முதல் நிலைத் தேர்வுக்கு பின்னர் 4 பொதுத்தாள்கள் தாள் ஒன்றுக்கு 250 மதிப்பெண்களாக 1000 மதிப்பெண்களும், விருப்ப பாடம் 2 தாள்கள் 500 மதிப்பெண்களும், கட்டுரை 250 மதிப்பெண் என மொத்தம் 1,750 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தபப்படுகிறது. 

இதனை Main Exam அல்லது பிரதான தேர்வு என்று அழைப்பார்கள். அடுத்து இரண்டாவது நிலை தேர்வான பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் மூன்றாம் நிலை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு எனப்படும் Personality Test தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடத்தப்படும். ஐஏஎஸ் ஐபிஎஸ் பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். The post IAS, IPS தேர்வு குறித்து அறிவிப்பு

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post