(Also Read: தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!)
உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு விதமான பணிகளில் SSC CGL Exam தேர்ச்சிப் பெற்றால் சேரலாம். அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ. 1,51,100 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பதவிக்கு ஏற்றார் போல் மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு SSC CGL Exam எழுதுவதற்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
SSC CGL Exam கல்வித்தகுதி:
அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல், இளநிலை புள்ளியியல் அலுவலர் பணிக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 12 வகுப்பில் கணித பாடம் அடங்கியிருக்க வேண்டும்.
SSC CGL தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கியுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி விண்ணப்பப்பதிவு முடிவடைகிறது. இதற்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனிலோ, நேரடியாக வங்கியின் மூலமாகவோ செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்ளாகவும், வங்கியின் மூலமாக செலுத்துவோர், நவம்பர் 29 ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும். SSC CGL Exam 2019 முதல் நிலைத் தேர்வுகள் அடுத்த வருடம் மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் உள்ளது. தெற்கு மண்டல SSC க்கான அலுவல் முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, 2 nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006 www.sscsr.gov.in
SSC CGL 2019 தேர்வு எழுதுவதற்க்கான முழுமையான கல்வித்தகுதி, பணி முறை, தேர்வு பாடத்திட்டம், கால அட்டவணை உள்ளிட்ட முழு விபரங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
Staff Selection Commission Official Notification For SSC CGL 2019 Exam:
Tags
SSC EXAM