குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.. கூடுதலாக 3 ஆயிரம் பேருக்கு வேலை!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை- வீடியோ

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. சமீபத்தில் 6491 பணியிடங்களுக்கு தேர்வு நடந்து முடிந்த நிலையில், காலிப்பணியிடம் 9398 ஆக அதிகரித்துள்ளதாகவும், எனவே அதற்கு ஏற்றார் போல் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்4 (2018-2019, 2019- 2020 ஆண்டுக்கானது) பதவியில் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பர் 1ம் தேதி தேர்வு நடந்தது.

இந்த தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டது. அதாவது தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களது தரவரிசை ஆகியவை கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது.

இளநிலை உதவியாளர்

இதனிடையே 2018, 2019ம் ஆண்டுக்கான குரூப்4 காலிபணியிடங்கள் 6491ல் இருந்து 9398 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397ல் இருந்து 607 ஆக உயர்ந்துள்ளது. இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) 2688, இளநிலை உதவியாளர் (பிணையம்) 104, வரித்தண்டலர்(கிரேடு1) 34 என 4558 ஆக பணியிடங்கள் உயர்ந்துள்ளது,

வரைவாளர்

தட்டச்சர் 1091ல் இருந்து 2734 ஆகவும், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 784ல் இருந்து 994 ஆகவும், நில அளவர் 509ல் இருந்து 505ஆகவும் ஆக்கப்பட்டுள்ளது. வரைவாளரில் 74 பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

விரைவில் வெளியீடு

தற்போது அதிகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

தேர்வு எழுதியவர்கள்

இதனால் குரூப் 4 காலி பணியிடங்கள் தேர்வுக்கு பிறகு திடீரென அதிகரித்து இருப்பதால் தேர்வு எழுதியவர்கள் நமக்கும் அரசு பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சந்தோஷத்தில் இருக்கிறாரகள்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post