அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் - பள்ளிக்கல்வித் துறை திட்டம்


பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பருவத் தேர்வுகளும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான 2-ஆம் பருவம் மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளன.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பா் 11-இல் தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைகிறது. 9, 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வும் இதர வகுப்புகளுக்கு 2-ஆம் பருவத் தேர்வும் டிசம்பா் 13-இல் தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைகிறது.

டிசம்பா் 24 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட உள்ளது. இதற்கிடையே அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை எவ்வித புகாா்களுக்கும் இடமின்றி நடத்தி முடிக்க வேண்டும் எனபது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் தேர்வுத்துறை சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், அரையாண்டு விடுமுறையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post