உறங்கும் சமயத்தில் செய்ய கூடாத விஷயங்கள்..




இன்றுள்ள பெரும்பாலானோர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதியுற்று வருகின்றனர். அந்த வகையில்., பலரும் பல விதமான காரணத்திற்காக தூக்கத்தை துளைத்துக்கொண்டு வரும் நிலையில்., பலர் காரணமின்றி தூக்கத்தை இழந்து உள்ளனர்.
இதனால் நமது உடலில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு., எதிர்கால வாழ்க்கையின் முக்கிய பிரச்சனைகளுக்கு இப்போதைய தூக்கமின்மை பெரும் காரணமாக அமைகிறது. இவ்வாறான நிலையில்., பலர் உறங்கும் முறைகளை வைத்தும் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
தலையணை உபயோகம்:

தூங்கும் சமயத்தில் பெரும்பாலானோர் மென்மையாக உள்ள தலையணையை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் முதுகெலும்பும் வலியானது ஏற்படவும்., கழுத்து வலியும் ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது.
இடது புறமாக உறங்குதல்:
உறங்கும் சமயத்தில் இடது புறமாக உறங்குவதால்., செரிமான உறுப்புக்கள் அனைத்தும் சீராக செயல்பட உதவுகிறது. இதனால் ஜீரண கோளாறு போன்ற பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பில்லாமல் நமது உடலை பாதுகாக்கிறது. இம்முறையில் நமது வலது கைகள் கீழே உள்ளவாக்கில் உறங்க வேண்டும்.
குப்புற படுத்து உறங்குதல்:
இன்றுள்ள பலரும் குப்புற படுத்து உறங்கும் நடவடிக்கையை வைத்திருப்பது வழக்கமாக இருக்கிறது. மேலும்., ஓய்வெடுக்க விரும்புபவர்கள் அனைவரும் குப்புற படுத்து உறங்குவதால் நுரையீரல்., கல்லீரல்., இதயம்., சிறுநீரகம் போன்ற உறுப்புக்கள் அதிகளவு அழுத்தத்திற்கு உள்ளாகி கடுமையான பிரச்சனையை ஏற்படுத்துகிறது

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post