TNPSC RECRUITMENT 2019

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கால்நடை உதவி மருத்துவர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.201

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post