பொறியியல் கல்வி- 50% பெண்களுக்கு ஒதுக்க இலக்கு


தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (டோட்) இயக்குநர் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தேசத்தின் நிலையான வளர்ச்சியைப்பெற 17 இலக்குகள், 169 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்தொடர்ச்சியாக ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் கல்வியில் சமவாய்ப்பு மற்றும் உரிமையை வழங்கும் வீதமாகவும் தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

அதன்படி, பொறியியல் படிப்பில் 100 இடங்கள் இருந்தால், அதில் 50 ஆண்கள், 50 பெண்கள் (50:50) என்ற இலக்கை நோக்கி நாம் செயல்பட வேண்டும். அதேபோல், பாலிடெக்னிக் படிப்பில் 55:45 என்ற இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் நாம் அடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பொறியியல் படிப்பில் 67:33 என்ற அளவிலும் பாலிடெக்னிக் கல்வியில் 90:10 என்ற அளவிலும்தான் பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post