நாளை அரையாண்டுத்தேர்வு... முன் கூட்டியே வெளியான கேள்வித்தாள்...!

நாளை 9 ம் வகுப்பு அரையாண்டு தேர்வு துவங்க உள்ள நிலையில், தமிழ் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது பற்றி குறித்து கல்வித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.


தமிழகம் முழுவதும் நாளை ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு துவங்க உள்ள நிலையில், நாளை நடக்க வேண்டிய தமிழ் பாட தேர்வுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே சமூகவலைதளத்தில் வெளியானதாக புகார் எழுந்துள்ளது. இது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முதல் நடந்து வருகின்றன. இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை துவங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகின்றது


நாளை தமிழ் பாடத்தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானது ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒன்பதாம் வகுப்பு தேர்வு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பொதுத் தேர்வாக நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான கேள்வித்தாள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


அந்த வகையில், சமூக வலைத்தளத்தில் வெளியான கேள்வித்தாள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கானது என தகவல் வெளியான நிலையில், அதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் மறுத்துள்ளார்.


எந்த மாவட்டத்தில் இருந்து வெளியான கேள்வித்தாள் என்பது குறித்தும் கல்வித்துறை அச்சடித்த கேள்வித்தாளா என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post