மழையால் பாதித்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


மழையால் புத்தகங்கள் சேதமடைந்து இருந்தால் உடனடியாக புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி பகுதியில் 1.25 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:கோபி பகுதியில் கனமழையால் நெல் பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல. 2021 சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். கனமழையால் புத்தகங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், உடனடியாக புதிய புத்தகங்கள் வழங்கப்படும். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உடனடியாக கிடைக்காத நிலையிலேயே பசுமை வீடு பயனாளிகளுக்கு பணம் வழங்க முடியாத நிலை உள்ளது. உள்ளாட்சி துறை மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகையை வங்கி ஊழியர்கள் காலதாமதமாக வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று தாமதம் இல்லாமல் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post