சென்னை: விண்ணில் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு பகுதி அளவில் நெருப்பு வளையமாக தெரிய தொடங்கியது.
ஒடிஷா மாநிலத்தில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் பார்க்கக் கூடாது என மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் சூரிய கிரணகம் தெளிவாக தெரியும் என கூறப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளாவில் இந்த அரிய சூரிய கிரகணத்தை காண முடியும்.
ன்று காலை 8.06 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. தமிழகத்தில் 9.29 மணிக்கு தெளிவாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முற்றிலுமாக இந்த சூரிய கிரகணம் முற்பகல் 11.09 மணிக்கு நிறைவடையும்.
இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 தொலைநோக்கிகள் இதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் காலை முதலே பிர்லா கோளரங்கில் குவிந்துள்ளனர். பொதுமக்களுக்கு விளக்கம் தருவதற்கு சிறப்பு பணியாளர்களையும் பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
துவாக சாதாரண கண்ணாடிகளைப் பயன்படுத்தி இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த சூரிய கிரகணம் 2031-ல்தான்