யாருக்கு கால் செய்தாலும் இலவசம்.. ஜியோவின் பழைய டெக்னிக்கை கையில் எடுத்த ஏர்டெல், வோடோபோன் - ஐடியா


சென்னை: ஏர்டெல், வோடோபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு நெட்வொர்க் நிறுவனத்திற்கு செல்லும் போன் காலுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

கார்ப்ரேட் உலகில் மோனோபோலி என்ற ஒரு வார்த்தை அதிகம் புழங்கும். பொதுவாக ஒரு சந்தையில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அதிக அளவில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கும். அப்போது திடீர் என்று வரும் புதிய நிறுவனம் ஒன்று, இலவசங்களை அள்ளி வழங்கி மற்ற நிறுவனங்களை காலி செய்யும்.

அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் இதேபோல் தொடக்க காலத்தில் நிறைய ஆபர்களை வழங்கியது. அதனால் அங்கு இருந்த பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மொத்தமாக மூடும் நிலைக்கு சென்றது.

ஜியோ எப்படி

இந்த நிலையில் இந்தியாவில் ஜியோ இதேபோல் இலவசங்களை அள்ளி வழங்கியது. மார்க்கெட்டிற்கு வந்த இரண்டரை வருடங்களில் இலவச கால் , தினமும் 1.5 ஜிபி, வெறும் 150 ரூபாய்தான் என்று மிக சிறப்பான பிளான்களை வைத்து இருந்தது. இதற்காக ஜியோ பல கோடிகளை செலவு செய்தது.

ஏன் செலவு

ஆம் ஜியோவில் இருந்து மற்ற நிறுவனங்களுக்கு செல்லும் போன்களுக்கு ஜியோ நிறுவனமே பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு சென்றது. அதே சமயம் இன்னொரு பக்கம் எல்லோரும் ஜியோவிற்கு மாறியதால் ஏர்டெல், வோடோபோன் பெரிய இழப்பை சந்தித்தது. ஏர்செல் தன்னுடைய ஷட்டரை மொத்தமாக இழுத்து மூடியது.

போது எப்படி

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தொடர் நஷ்டம் காரணமாக ஜியோ - வேறு நெட்வொர்க் போன் கால்களுக்கு பணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. அதாவது ஜியோவில் இருந்து வேறு நெட்டோவொர்க் போனுக்கு கால் செய்தால் நாம் பழையபடி கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான திட்டங்களை ஜியோ கடந்த மாதம் அறிவித்தது.

போது எப்படி

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் தொடர் நஷ்டம் காரணமாக ஜியோ - வேறு நெட்வொர்க் போன் கால்களுக்கு பணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. அதாவது ஜியோவில் இருந்து வேறு நெட்டோவொர்க் போனுக்கு கால் செய்தால் நாம் பழையபடி கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான திட்டங்களை ஜியோ கடந்த மாதம் அறிவித்தது.


அட எப்படி

ஆனால் திடீர் திருப்பமாக, தற்போது ஏர்டெல், வோடோபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு நெட்வொர்க் நிறுவனத்திற்கு செல்லும் போன் காலுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளது. முன்பு ஜியோ செய்ததை தற்போது இவர்கள் செய்கிறார்கள். அதாவது இனி ஏர்டெல், வோடோபோன் - ஐடியா ஆகிய நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால் கட்டணம் இல்லை.

கட்டணம் இல்லை

இதற்காக நான்கு புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னதாக 28 நாள் பிளான் ரீசார்ஜ் செய்தால் 1000 நிமிடங்கள், 84 நாள் பிளான் ரீசார்ஜ் செய்தால் 3000 நிமிடங்கள், 365 நாள் பிளான் ரீசாஜ் செய்தால் 12 ஆயிரம் நிமிடங்களை வேறு நெட்வொர்க்கிற்கு இலவசமாக பேச முடியும். தற்போது இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

என்ன பிளான்
  • இந்த மூன்று நிறுவனங்களும் பின்வரும் பிளான்களை பேசிக் பிளான்களாக கடைபிடிக்கிறது.
  • ரூபாய் 219: 28 நாட்கள், ஒரு நாளைக்கு 1 ஜிபி, எல்லா கால்களும் இலவசம்
  • ரூபாய் 399: 56 நாட்கள், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி, எல்லா கால்களும் இலவசம்
  • ரூபாய் 449: 56 நாட்கள், ஒரு நாளைக்கு 2 ஜிபி, எல்லா கால்களும் இலவசம்
  • இதே பிளான் ஏர்டெல்லில் 1 ரூபாய் குறைவாக கிடைக்கிறது.
ஜியோ இல்லை

ஜியோ இப்போதுதான் மற்ற நெர்வோர்ட் கால்களுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. இதனால் அந்த நிறுவனம் மீண்டும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமா என்பது சந்தேகம்தான். அதனால் ஜியோ தொடர்ந்து சந்தையில் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post