TNTET 2020 Exam முக்கிய அறிவிப்பு: இன்ஜினியரிங் படித்தவர்களும் அரசு பள்ளி ஆசிரியராகலாம்!

Tamil Nadu TET Exam Qualification: தமிழகத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் (BE Graduate) டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
samayam-tamil
   

ஹைலைட்ஸ்:

  • இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • இதனால் இன்ஜினியரிங் முடித்தவர்கள் டெட் தேர்வு எழுதி, 6 முதல் 8 வகுப்பு வரையில் கணிதம் பாட ஆசிரியர் ஆகலாம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
தமிழகத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களும் இனி TET தேர்வு எழுதி, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு கணித ஆசிரியர் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் ஆசிரயர் பணி புரிவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligiblity Test –TET) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பி.எட் ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, ஆசிரியராக பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

முன்னதாக பி.எட் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள், இன்ஜினியிரிங் முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 4 ஆண்டுகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.எட் படிப்பை தொடருவதற்கு மாணவர்களிடையே ஆர்வமில்லாமல் இருந்தது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post