மத்திய அரசு வரி விதிப்பிற்குள் இருக்கும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் பான் எண் அல்லது ஆதார் எண்-ஐ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அப்படிப் பான் அல்லது ஆதார் எண் சமர்ப்பிக்காதவர்களின் சம்பளம் அல்லது வருமானத்தில் 20 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
வரி வசூல் இலக்கை அடைய வேண்டும் என மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள விதி முறைகளில் இருக்கும் ஓட்டைகளைக் களையும் விதித்தாகப் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் மூலம் வரி செலுத்தாமலும், குறைவாக வரி செலுத்துவோரை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என மத்திய அரசு பெரிய அளவில் நம்புகிறது.
சமீபத்தில் மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்ட TDS (tax deducted at source) குறித்த அறிக்கையில் பான் கார்டு இல்லாத ஊழியர்கள் கட்டாயம் ஆதார் எண்-ஐ வரி செலுத்தும் போது சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இல்லையெனில் அவர்களின் வருமானம் அல்லது சம்பளத்தில் கட்டாயம் 20 சதவீத வரி வசூலிக்கப்படும் என மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது இருக்கும் விதிமுறையில் நிறுவனம், ஒரு ஊழியர்கள் பான் எண் சமர்ப்பிக்கவில்லையெனில் குறிப்பிட்ட அளவிலான பணத்தை ஊழியரின் சம்பளத்தில் வரியாக மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும் என வரி வாரியத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் தற்போது பான் எண் இல்லாதவர்கள் கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பித்தாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுப் பான் எண் மற்றும் ஆதார் கட்டாயம் வரிச் செலுத்தும்போது சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்த போது பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் கடந்த நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் வரி செலுத்துவோர் பான் அல்லது ஆதார் எண்-ஐ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்து. ஆதார் மற்றும் பான் எண் மத்தியில் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் படி பான் அல்லது ஆதார் எண் சமர்ப்பிக்காமல் வரி செலுத்துவோரின் வருமானம் அல்லது சம்பளம் அடிப்படை வரி வரம்பு விடவும் குறைவாக இருந்தால் அவர்களுக்கு வரி விதிக்கப்படமாட்டாது. அதேபோல் வருமான வரிச் சட்டம் 192-இன் படி அடிப்படை வரி விதிக்கு அதிகமாக வருமானம் இருந்தால் அவர்களுக்கு 20 சதவீதம் விதிக்கப்படும், அதேபோல் 20 சதவீத வரி படிக்கும் அதிகமாக வருமானம் இருந்தால் அதற்காக வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.