குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு என தகவல்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.இந்த முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சி.பி.ஐ.க்கு விசாரணையை மாற்ற வேண்டும். மேலும், அந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம் வருகிறது.