75% வருகை கட்டாயம்: 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு


குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவேடு கொண்ட மாணவர்களே 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் ஜனவரி 1, 2020-ம் தேதியில் குறைந்தபட்சம் 75 சதவீத வருகையை உறுதி செய்யவேண்டும். அதைவிடக் குறைந்த வருகையைக் கொண்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பிப்ரவரி 15-ம் தேதி சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்குகின்றன. குறைந்தபட்ச, கட்டாய வருகைப் பதிவேட்டைக் கொண்ட (75 சதவீதம்) மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.

குறைவான வருகையைக் கொண்ட மாணவர்கள் மண்டல அலுவலகங்களை அணுக வேண்டும். இது தொடர்பான இறுதி முடிவு ஜனவரி 7 அல்லது அதற்கு முன்பு எடுக்கப்படும்.

மாணவரின் குறைவான வருகைக்கு உண்மையிலேயே தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால், அதற்கான ஆவணங்களை ஜனவரி 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 7-ம் தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது''.

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 2020 பொதுத் தேர்வில் இதுபோன்ற ஏராளமான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post