எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. இதெல்லாம் முதல்ல தெரிஞ்சுகோங்க..!

பொதுவாக இன்றைய நாளில் வங்கிகளில் நமக்கு சாதமாக மிக பயனுள்ளதாக இருக்கும் விஷயங்களில் ஒன்று தான் டிஜிட்டல் சேவைகள்.

எனினும் டிஜிட்டல் சேவைகள் தான் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகவே உள்ளது. ஏனெனில் இன்றைய நாளில் மக்களின் மொபைல் எண்ணையும் மெயில் ஐடியையும் பயன்படுத்தி தான் நிறைய மோசடிகள் இருக்கிறது.

ஆக அடிக்கடி அத்தகைய மெயில் ஐடியையும், மொபைல் எண்ணும் சரியாக இருகிறதா? அதை எப்படி தொடர்ந்து நம்முடன் தொடர்பில் வைத்துக் கொள்வது என்பது பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

பரிவர்த்தனைகளை பற்றி அறிய உதவும்

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை எப்படி தங்களது சேமிப்பு கணக்குடன் இணைப்பது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள உதவும், ஏனெனில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி அறிய இது உதவும்.

அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை

ஏனெனில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது உங்களது மொபைல் எண்ணுக்கு செய்தி வரும். ஆனால் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், உங்கள் வங்கி கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அது சரியான நேரத்தில் உங்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லை.

சரியான மொபைல் நம்பரை கட்டாயம் கொடுங்கள்

அதிலும் தற்போது எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள ஏடிஎம் திருத்தங்களில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் 10,000 ரூபாய்க்கு மேல் எடுக்கும் போது ஓடிபி எண் உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் என்பது மிக வரவேற்கதக்க விஷயம் தான். ஆக இன்று முதல் தயவு செய்து உங்களது சரியான மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியையும் இணைத்துவிடுங்கள்.

நம்பரை உடனடியாக மாற்ற வேண்டும்

அதே நேரம் ஏதாவது ஒரு காரணத்தால் உங்களது பழைய நம்பரை மாற்ற நேரிட்டால் வங்கிக்கு அதை உடனே அதை தெரியப்படுத்தவும். மொபைல் எண் மட்டும் அல்ல, மெயில் ஐடியும் அப்படித்தான். ஏனெனில் உங்களது மெயில் ஐடியை வைத்தும் மோசடி செய்ய முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

எஸ்பிஐ ட்வீட்

இது குறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை மாற்றியுள்ளீர்களா? ஆம் எனில் அதை வங்கிகளில் உடனே புதுப்பியுங்கள், ஏனெனில் எந்தவொரு எங்களது முக்கியமான தகவலையும் இழக்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

வங்கி கணக்கில் எப்படி மாற்றுவது?

எஸ்பிஐ வங்கி இணைய சேவையை லாகின் செய்து, அங்கு உங்களது மை அக்கவுன்ட்ஸ் & புரஃபைல் ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் புரஃபைல் லிங்கை க்ளிக் செய்து உங்களது தனிப்பட்ட விவரம் மற்றும் மொபைல் எண்ணை பகுதிக்கு க்ளிக் செய்து செல்லவும். இங்கு திருத்து ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.

புதிய மொபைல் எண்

தகவல்களைக் திருத்தும் பகுதிக்கு சென்று புதிய மொபைல் எண் அல்லது புதிய மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும். இதன் மூலம் கிடைக்கும் ஒடிபியை பயன்படுத்தி புதிய கொடுக்கவும். இதன் பிறகு உங்களது சமர்பிக்க வேண்டும். ஒரு முறைக்கு இரு முறை உங்களது மொபைல் எண் சரியாக உள்ளதா என்றும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மெயில் ஐடியை எப்படி மாற்றுவது?

எஸ்பிஐ மொபைல் பயன்பாடு வழியாக மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை எப்படி மாற்றுவது? முதலில் உங்களது எஸ்பிஐ மொபைல் பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும். அங்கு மெனுவில் இருந்து மை புரஃபைல் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அங்கு உங்களது புதிய மெயில் ஐடியை கொடுத்து சமர்பிக்கவும்.

வங்கியை அணுகுங்கள்

எப்படியோ உங்களது மொபைல் எண்ணும் மெயில் ஐடியும் செயல்பாட்டில் இருக்கும்போது உங்களது வங்கி கணக்கில் மோசடி செய்ய நினைத்தால், உடனே வங்கியை அணுக முடியும். தவறுகளை கொஞ்சம் தடுக்க முடியும் என்பதை மக்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு மிக பயனுள்ள ஒரு விஷயம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது எஸ்பிஐ மட்டும் அல்ல, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post