'ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்வி படிப்பை தேர்வு செய்யும் வகையில், அவர்களுக்கு விருப்பமறிதல் தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பல்வேறு வகையான மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.புதிய திட்டங்கள் பாடத் திட்ட மாற்றம், பிளஸ் 1 பொதுத் தேர்வு, 'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி, சி.ஏ., தேர்வுக்கு ஆயத்த பயிற்சி என, பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த வரிசையில், 10ம் வகுப்புக்கு பின், எந்த படிப்புக்கு செல்லலாம் என, மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு விருப்பமறிதல் தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டமறிதல் தேர்வு என்ற பெயரிலான இந்த தேர்வு, அனைத்து மாவட்டங்களிலும், தனித்தனியாக நடத்தப்படுகிறது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் கணினி வழி தேர்வாக நடத்தப்பட உள்ளது. ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும். இம்மாதம், இறுதி வாரத்தில் தேர்வை நடத்த உள்ளதால், அதற்கான முன் ஏற்பாடு பணிகள் துவங்கி உள்ளன.முன் ஏற்பாடு பணிதேர்வு நடக்கும், 90 நிமிடங்களில், 90 வினாக்களுக்கு, கணினி வழி வினாத்தாளில் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த வினாக்கள், கொள்குறி வகையில் இருக்கும். அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும். ஆனால், வினா வரிசைகள் மாறி இருக்கும்.'ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்த பட்சம், 20 மாணவர்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு, பள்ளிகளின் கணினி ஆய்வகத்தில் தேர்வுகள்நடத்தப்பட வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
'இந்த தேர்வில், பல்வேறு துறைகள் குறித்த அடிப்படை தகவல்கள், கேள்விகளாக இடம் பெறும். அவற்றில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், அவர்கள் எந்த வகை படிப்புகளை, உயர்கல்விக்கு தேர்வு செய்யலாம் என்ற வழிகாட்டுதல்வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags
Students News