விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், டிசம்பர், 23ல், இரண்டாம் பருவ மற்றும் அரையாண்டு தேர்வு முடிந்தது. இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக, ஜனவரி, 1 வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்கும்படி, பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் பள்ளிகள் திறப்பு இந்நிலையில், தேர்தல் நடத்தப்படாத, 10 மாவட்டங்களிலும், நேற்றே பல தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாடத் திட்ட பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் செயல்பட துவங்கின

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post