சென்னை: தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் (Tamilnadu State Data Centre), நவீன தொழில்நுட்பமான, "மேகக் கணினியம்" (cloud computing) ஏற்படுத்த, 11.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் துறையில் தற்போது நவீன தொழில் நுட்பமான, "மேகக் கணினியம்" பயன்படுத்தப்படுகிறது. இது, கம்ப்யூட்டர் திறனை, இணையத்தின் வாயிலாக பெறக்கூடிய, தொழில்நுட்பம். இதன் மூலம் கம்ப்யூட்டர் திறன்களை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து உள் கட்டுமான சேவை, மென்பொருள் தள சேவை, மென்பொருள் சேவை, ஆகியவற்றை எளிதாகப் பெற முடியும்.
அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநிலத் தரவு மையத்தில், "மேகக் கணினியம்" ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா 11.39 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இப்பணி நிறைவு பெற்றால், அரசுத் துறைகள் தங்களுக்கென தனியாக கட்டமைப்பு ஏற்படுத்துவதால் ஏற்படும் காலதாமதம், கணினி திறனை குறைவாக பயன்படுத்துதல் தவிர்க்கப்படும். திறன் மேம்பாட்டுக்கான தேவை, கம்ப்யூட்டர் பயன்பாடுகளின் பேரிடர் தரவு மீட்பு, ஆகியவற்றுக்கு, "மேகக் கணினியம்" உதவியாக இருக்கும்.
Tags
News