பெட்ரோலிய துறையில் 2 வருட எம்.பி.ஏ. படிப்பில் சேர...

பெட்ரோலிய தொழில்நுட்பத்திற்கான ராஜீவ் காந்தி கல்வி நிறுவனம், 2014 - 16ம் கல்வியாண்டின், 2 வருட MBA படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் மேலாண்மை என்பது இப்படிப்பின் பெயர்.
படிப்பில் சேரும் தகுதி
பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்கள், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஜியோசயின்சஸ் ஆகிய படிப்புகளில் முதுநிலை படிப்பை முடித்தவர்கள், CAT/GMAT 2013 தேர்வெழுதியோர் மற்றும் XAT 2014 தேர்வெழுதவுள்ளோர் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். விரிவான தகுதி விபரங்களை அறியwww.rgipt.ac.in என்ற வலைதளம் செல்லவும்.
இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். CAT/GMAT/XAT தேர்வு மதிப்பெண்கள், விண்ணப்பதாரர்களை shortlist செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
தகுதிநிலையை அடைந்து, படிப்பிற்கு பின்னர், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள, நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்யும் நபர்கள், CAT/GMAT/XAT ஆகிய தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
மாணவர்களை தேர்வு செய்தல் மற்றும் படிப்பை வழங்குதல் ஆகிய எந்தப் பணியிலும், IIM -களுக்கு எந்தப் பங்கும் இருக்காது.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கு www.rgipt.ac.in என்ற வலைதளம் செல்க. விண்ணப்பிக்கும் கடைசித் தேதி பிப்ரவரி 21.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post