முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆர் சுப்பையா முன்னிலையில் (20.01.14)
பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தன.
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக நாளை முதல்(21.01.14) தனியாக வெவ்வேறு நாட்களில் அதாவது முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு ஒருநாளிலும், வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வுதாள் 1 மற்றும் தாள் 2 வழக்குகளை படியலிட நீதியரசர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பு காரணமாக ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 வழக்கின் மனுதாரர்கள் பலருக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர் .அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளதால், அவர்களின் ரிட் மனுக்களை வாபஸ் பெறவிரும்புவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.எனவே அவர்களின் வழக்குகள் நாளை (21.01.14 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags
kalvi news