ஏ. ஐ. பி. எம். டி - 2014 தேர்வெழுத மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அத்தேர்வில் கட்டாயம் வெற்றியை ஈட்டுவதற்கான பயன்மிக்க பல ஆலோசனைகள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
என். இ. இ. டி., தேர்வுக்கும், ஏ. ஐ. பி. எம். டி., தேர்வுக்கும் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?
இரண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்திலும் வித்தியாசங்கள் கிடையாது. AIPMT தேர்விலும், NEET தேர்வைப்போல் ஒரே பேப்பர்தான். முன்புபோல, முதல்நிலை மற்றும் மெயின் என்று இரண்டு பேப்பர்கள் கிடையாது. இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 45 கேள்விகள் உட்பட, மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.
AIPMT 2014 தேர்வில் நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படுமா ? என்பது இன்னும் முடிவாகவில்லை . மேற்கூறிய இரண்டு தேர்வுகளின் அம்சங்களும் ஒன்று எனும்போது , அவற்றுக்கு தயாராகும் செயல்முறைகளும் ஒன்றுதான் . என் . இ . இ . டி ., என்பது அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான ஒரு பொதுவான நுழைவுத் தேர்வாக இருந்தது . அதனால் , மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கென்று தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தேவையில்லாமல் இருந்தது .
ஆனால், 2014 ம் ஆண்டிலிருந்து AIPMT தேர்வு நடத்தப்படவுள்ளதால், மாணவர்கள், வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் இதர புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்காக, பல்வேறான தேர்வுகளை எழுத வேண்டும்.
AIPMT 2014 தேர்வை வெல்வதற்கான வியூகங்கள் யாவை ?
* மாணவர்கள் , தாங்கள் எவற்றில் பலமாக இருக்கிறோம் மற்றும் பலவீனமாக இருக்கிறோம் என்பதைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் . வெயிட்டேஜ் அதிகமுள்ள பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . மற்றபடி , நமக்கு எது நன்றாக தெரியுமோ , அதையே படித்துக்கொண்டு , கடினமான விஷயங்களை அப்படியே படிக்காமல் விட்டுவிடுவது சரியல்ல .
* ரிவிசன் செயல்பாட்டின்போது , குறித்த மற்றும் திட்டமிட்ட நேரத்திற்குள் , அனைத்து பிரிவுகளையும் முடிக்கும் வகையில் திட்டமிடுவது முக்கியம் . ஏனெனில் , முடிந்தளவிற்கு , அதிகளவில் மாதிரி கேள்வித்தாள்களுக்கு பதிலெழுதி பயிற்சி பெறுவது அவசியம் .
* நீங்கள் எழுதிப் பார்த்த மாதிரி கேள்வித்தாள்களை அலசிப் பார்ப்பது அவசியம் . உங்களின் தவறுகளில் எது சாதாரணமானவை (silly) , எது கருத்தாக்க ரீதியானவை (conceptual) மற்றும் நினைவுத்திறன் அடிப்படையிலானவை (memory based) என்று பிரித்துப் பார்த்து ஆய்ந்து , திருத்திக்கொள்ள வேண்டும் .
* சொந்த குறிப்புகளின் கருத்தாக்கங்களிலிருந்து சிறிய குறிப்புகளை ( notes ) தயார்செய்ய வேண்டும் . பல்வேறான புத்தகங்களிலிருந்து தியரிகளை படிப்பதை தவிர்க்க வேண்டும் . வகுப்பில் எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் கோச்சிங் மையங்களின் sheet - கள் ஆகியவற்றை மட்டுமே refer செய்வது நல்லது .
* நேரடியான மற்றும் நினைவு அடிப்படையிலான கேள்விகளுக்கு , அதீத தன்னம்பிக்கையின் காரணமாக , தவறான பதில்களை எழுதிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும் . கேள்விகளை மிகவும் கவனமாக படிக்க வேண்டும் . ஏனெனில் , அவற்றில் ஏதேனும் சிறு வித்தியாசங்கள் இருக்கலாம் .
AIPMT தேர்வுக்கு படிக்க , NCERT புத்தகங்கள் மட்டும் போதுமானவையா ? அல்லது வேறு புத்தகங்களும் தேவையா ?
NCERT புத்தகங்கள் சிறந்தவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . அதேசமயம் , அவை மட்டுமே போதுமானவை அல்ல . AIPMT தேர்வுக்கு , சுருக்கமாகவும் , தொடர்பான வகையிலும் மற்றும் அறிவியல் பூர்வமாகவும் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் தேவை .
NCERT வெளியிடும் Examplar பரவலாக பரிந்துரைக்கப்படும் அம்சமாகும் . பழைய கேள்வித்தாள்களை வைத்து அதிகளவில் பயிற்சி செய்வது முக்கியம் .
AIPMT 2014 தேர்வில் , எந்தளவிற்கு கடின அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன ?
போட்டி அதிகமாக இருப்பதால், கடந்த ஆண்டுகளைவிட, இந்த 2014 ம் ஆண்டு தேர்வு சற்று கடினமாகவே இருக்கும். அதேசமயம், முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற, மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது.
இதர முக்கிய MBBS/BDS தேர்வுகள் யாவை?
* AIIMS(All India Institute of Medical Science)
* BHU (Banaras Hindu University)
* MGIMS, Wardha (Mahatma Gandhi Institute of Medical Sciences)
* State PMTs (Pre Medical tests)
* AFMC (Armed Forces Medical College)
போன்றவையே அந்த தேர்வுகள்.
Tags
News