தாமதமாகும் குரூப்-2 தேர்வு விண்ணப்ப அறிவிப்பாணை.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில்,
"2014ம் ஆண்டிற்கு தேவைப்படும் குரூப்-2 பணியிடங்கள் 1181. இதற்கான அறிவிப்பாணை 2014, ஜன., 3வது வாரத்தில் வெளியாகும். அதன் பின் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 18.5.2014ல் தேர்வும், ஆக., 3வது வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.ஜன.,20ம் தேதியை கடந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பாணை இதுவரைவெளியாகவில்லை. ஜன., முதல் டிச., வரை 22 வகை தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி.,நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தாண்டுக்கான முதல் அறிவிப்பே குரூப்-2 தேர்வு தான். ஆனால், முதல் தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாவதிலேயே தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

1 Comments

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

  1. Amazing! Its genuinely awesome paragraph, I have got much clear idea on the topic of from this piece of writing.

    ReplyDelete
Previous Post Next Post