அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் பரிசு: அரசுக்கு ரூ.308 கோடி செலவாகும்


மாற்றம் செய்த நாள்

06ஜன
2014 
00:33
பதிவு செய்த நாள்
ஜன 06,2014 00:18
சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 308.28 கோடி ரூபாய் மதிப்பில், பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருணை தொகை:

இதுகுறித்த அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முதன் முறையாக, பொங்கலன்று கருணைத் தொகை வழங்குவதை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார்.இதன்படி, 2012 - 13 நிதியாண்டிற்கு, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு, 30 நாள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும்.அரசு அலுவலர்களில், 'ஏ' மற்றும் 'பி' பிரிவினர், ஆசிரியர்கள், 2012 - 13ம் நிதியாண்டில் குறைந்த பட்சம், 240 நாள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றி, சில்லறை செலவினத்தின் கீழ், மாத அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள்; தொகுப்பூதியம் பெறுவோருக்கு, 1,000 ரூபாய் கிடைக்கும்.

மேலும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு திட்ட பணியாளர்கள்; அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; பஞ்சாயத்து உதவியாளர்கள்; ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்; தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி,
பின் நிரந்தர பணியாளர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கும், 1,000 ரூபாய் கிடைக்கும்.

பல்கலை குழு:

உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு; அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு; இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ், சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த, போனஸ் பொருந்தும்.

ரூ.500 பரிசு:

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தலையாரி மற்றும் கர்ணமாக இருந்த, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு, 500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும். இதனால், அரசுக்கு, 308.28 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முதல்வரின் இந்த போனஸ் அறிவிப்பை, அரசு ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post