ஜனவரி இறுதியில் குரூப்-4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி.,

 

மதுரை: "இம்மாத இறுதியில் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் பதிவுத்துறை அலுவலர் சங்க இணைய தளம் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நவநீத கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நேர்மையாகவும், வெளிப்படையான நிர்வாகத்துடன் பணிகளை மேற்கொள்கிறது. குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகளை வெளியிட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுத் துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குரூப்-1 தேர்வு குறித்து விளம்பரம் வெளியிட்டோம். ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இதன் முதற்கட்ட தேர்வு ஏப்.,26ல் நடக்கும் என்றார்

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post