புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் திருவனந்தபுரம் செம்பகா பள்ளி முதலிடம் பிடித்தது.
புதுச்சேரி லிசே பிரான்சே பள்ளியில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான அறிவியல் தகுதி சுற்று போட்டிகள் புதுச்சேரி, கொல்கத்தா, சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் நடந்தன; 8ம் வகுப்பு மாணவர்கள், 400 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
புதுச்சேரி லிசே பிரான்சே பள்ளியில் இறுதி போட்டி நடந்தது. 12 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். புத்தக அறிவை தாண்டி நடைமுறையில் மாணவர்களின் அறிவியல் திறமை சோதிக்கப்பட்டது. திருவனந்தபுரம், செம்பகா பள்ளி, முதலிடத்தையும்; கொச்சின் மார் அத்தான்ஷியேஸ், பெங்களூரு இன்வெச்சர் அகடமி, இரண்டாம் இடத்தையும்; கொல்கத்தாவை சேர்ந்த, எம்.பி., பிர்லா பவுண்டேஷன் பள்ளி, பியூச்சர் பவுண்டேஷன் பள்ளி, மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
Tags
News