காரைக்கால்: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை, காரைக்காலில் திறந்து வைத்துள்ளார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன். இது அந்தப் பல்கலையின் 7வது வளாகமாகும்.
ஏற்கனவே, சென்னை, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டிணம், கொச்சி மற்றும் கண்ட்லா ஆகிய இடங்களில் அப்பல்கலையின் வளாகங்கள் அமைந்துள்ளன.
இந்தப் புதிய வளாகத்தில், உள்ள இடங்களில் மொத்தம் 50%, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கே ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகம், துறைமுகம் மற்றும் கடல்சார் துறைகளில் குறுகியகால படிப்புகளையும், நாடிகல் சயின்ஸ், மரைன் இன்ஜினியரிங், நேவல் ஆர்கிடெக்சர் மற்றும் கடல் பொறியியல், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட துறைகளில் பட்டப் படிப்புகளையும் வழங்குகிறது.
Tags
kalvi news