ராஞ்சி: சிறிய பிராந்திய மொழிகள் மற்றும் அழியும் நிலையிலுள்ள மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு மையம் அமைப்பதற்கு ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கு, பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மையத்தின் மூலம், அபாய கட்டத்தில் இருக்கும் மொழிகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் குறித்த அனைத்து அம்சங்களும் விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்படும்.
சிறிய மற்றும் அபாய கட்டத்திலுள்ள மொழிகள் சம்பந்தமாக, துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, பிரிவுகளுக்கு இடையிலான ஆராய்ச்சி, களப் பணி, பகுப்பாய்வு, ஆவணக் காப்பு மற்றும் ஆவணப்படுத்தல் உள்ளிட்டவை, இந்த மையத்தின் பிரதான நோக்கம்.
Tags
News