தென் இந்திய அறிவியல் கண்காட்சி: மாணவர்களைக் கவர்ந்த சூரிய மின் சக்தி சைக்கிள்

சூரிய மின் சக்தியில் இயங்கும் களை எடுக்கும் இயந்திரம், தெளிப்பு நீர் பாசனத்துக்கு உதவும் புதுமையான கருவி என வேளாண்மைக்குத் தேவையான பல்வேறு கருவிகள் தென் இந்திய அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் உள்ள இந்தக் காட்சியில் பத்தாம் வகுப்பு மாணவர் உருவாக்கிய சூரிய மின் சக்தி சைக்கிள் பலரையும் கவர்ந்தது.
இந்த சைக்கிளை 5 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் நிறுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சக்தியைக் கொண்டு 15 கிலோமீட்டருக்கு சைக்கிளை தானாகவே இயக்கலாம் என்கிறார் புதுச்சேரி பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவரான ஆர்.யோகேஸ்வரன்.
சைக்கிளின் பின்பகுதியில் உள்ள சூரிய மின் தகடுகள் மூலமாக பேட்டரிக்கு மின் சக்தி கிடைக்கும். இந்த மின்சக்தியின் மூலம் 25 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் சைக்கிளை  இயக்க முடியும். வழக்கமான பிரேக்குகளைக் கொண்டே வேகத்தைக் குறைக்கவும் செய்யலாம். வழக்கமான சைக்கிள் விலையுடன் கூடுதலாக 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே இந்த சூரிய மின் சக்தி சைக்கிளுக்கு செலவாகும். மழைக்காலங்களில் வீட்டிலேயே மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் பேட்டரியையும் வடிவமைத்துள்ளதாக அவர் கூறினார்.
அதோடு, ரோபோக்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி, கல்லூரி மாணவர்களின் ஹோவர் கிராப்ட் இயந்திரம் உள்ளிட்டவையும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. தென் இந்திய அறிவியல் கண்காட்சியில் 220-க்கும் மேற்பட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை வரும் 24-ஆம் தேதி வரை மாணவர்களும் பொதுமக்களும் பார்வையிடலாம்.  மாணவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பொதுமக்கள் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் கண்காட்சியைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post