அமெரிக்காவின் சிறந்த ஆசிரியராக இந்திய வம்சாவளி பேராசிரியை மீரா சந்திரசேகர் தேர்வு.

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை மீரா சந்திரசேகர், அமெரிக்காவில் 2014ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் துறைகளில் மீரா சந்திரசேகர் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ராபர்ட் போஸ்டர் செர்ரி விருது என்று அழைக்கப்படும் அந்த விருது பெறுபவர்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்(ரூ.1½ கோடி) கொடுக்கப்படும்.கல்வித் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக மீரா சந்திரசேகருக்கு இந்த விருதை அமெரிக்க பேய்லர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ராபர்ட் போஸ்டர் செர்ரி விருதுகிடைக்கப் பெற்றுள்ளது மிகுந்த கெளரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக மீரா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2002ல் சென்னை ஐ.ஐ.டி., விருது

சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவியான மீரா சந்திரசேகரை கல்லூரி நிர்வாகம் 2002 ஆம் ஆண்டு சிறந்த மாணவிக்கான விருது வழங்கி பெருமைபடுத்தியது. மீரா சந்திரசேகர் மைசூர் எம்.ஜி.எம். கல்லூரியில் கடந்த 1968ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். பொறியியல், அறிவியியல், கணிதம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு அமெரிக்க தேசிய அறிவியியல் நிறுவனம் கடந்த 1999ஆம் ஆண்டு அதிபர் விருதை வழங்கியது. தனது சிறந்த பணிக்கு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் மீரா சந்திரசேகர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post