கோட்டயம்: தென்னிந்தியாவின் முதல் அறிவியல் நகரம், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் கூர்விலங்காடு என்ற இடத்தில் அமையவுள்ளது.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில், ரூ.100 கோடி செலவில், மத்திய - மாநில கூட்டு முயற்சியில் இந்த அறிவியல் நகரம் ஏற்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் ரூ.51 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இங்கே வருகை தருபவர்கள், அறிவியலின் பல்வேறு தன்மைகளை அனுபவித்து உணரலாம். இங்கே அறிவியல் கேலரி, அனிமேஷன் தியேட்டர், state - of - the - art observatory, வாட்டர் தீம் பார்க் மற்றும் அறிவியல் கல்வி அரங்கங்கள் உள்ளிட்டவை இருக்கும்.
பெரிய நகரங்களுக்கு வெளியே அமைக்கப்படும் முதல் அறிவியல் நகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டயத்தை ஒரு முக்கிய கல்வி மற்றும் அறிவியல் கேந்திரமாக உருவாக்கும் ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
Tags
Education News