ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை விரைவில்....


கவர்னர் உரைக்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா,ஆசிரியர் தகுதி தேர்வில்இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,'
என்று அறிவித்தார். 2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்)எடுக்க வேண்டும். இதில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82.5மதிப்பெண்ணாக குறைந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண்வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என்பதால் அரை மதிப்பெண் கிடைக்காது. எனவே, சலுகைக்குப் பிறகு 82 அல்லது 83, இவற்றில் எது தேர்ச்சி மதிப்பெண் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணிலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 82 மதிப்பெண் என்பது சலுகைக்குப் பிறகான தேர்ச்சி மதிப்பெண்ணாக சி.பி.எஸ்.இ. நிர்ணயித்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்சலுகை தொடர்பான அரசாணையில் இது குறித்து தெரியவரும்.

இதற்கிடையில் முதல்வர் வெளியிட்ட5 சதவீத மதிப்பெண் சலுகை அறிவிப்புக்கான அரசாணை இன்றோ அல்லது நாளைக்குள்ளோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாணையில்தான் தேர்வர்களின் வினாக்களுக்கு விடைகிடைக்கும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post