பிளஸ் 2 செய்முறை தேர்வில் புதிய மாற்றங்கள்

பிளஸ் 2 செய்முறை தேர்வு மற்றும் மதிப்பெண் பதிவு செய்வதிலும், நடப்பு கல்வியாண்டில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார், 3ம் தேதி தொடங்குகிறது. இதில் ஃபோட்டோவுடன் கூடிய விடைத்தாள், பார்கோடு எண், ஆன்லைன் மூலம் நாமினல் ரோல் பதிவேற்றம் உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது, பிளஸ் 2 செய்முறை தேர்வுகளும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. பொதுவாக அறிவியல் பாட செய்முறை தேர்வில் மாணவர்களின் வருகை பதிவு, நடத்தை மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சிகளில் காட்டிய ஈடுபாடு, ரெக்காடு நோட்டில் படம் வரைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 20 மதிப்பெண்களும், செய்முறை தேர்வில் அவர்கள் செய்து முடிக்கும் பரிசோதனைக்கு 30 மதிப்பெண் எனவும் 50 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இதற்கான மதிப்பெண் தாள் மொத்தமாக முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள "யூசர் ஐடி" மற்றும் பாஸ்வேர்டு மூலம் மாணவர்களின் பதிவெண் கொண்ட மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் கேட்கப்பட்டுள்ள மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை நிரப்பி தேர்வு முடிந்த பின், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் செய்முறை தேர்வில் வரிசை எண்களையும் இயக்குனரகமே தேர்வு செய்துள்ளது. உதாரணமாக ஒரு மையத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் எழுதினால், அவர்கள் அருகருகில் உட்காராத வகையில் பதிவு எண் அமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post