எங்கு வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி: மின்வாரிய அலுவலகங்களை ஒருங்கிணைக்க முடிவு


தமிழகத்தில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 110 நகரங்களில், மின்வாரிய அலுவலகங்களை, ஒருங்கிணைக்கும் திட்டம் விரைவில், செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 'எங்கு வேண்டு மானாலும், நுகர்வோர், மின் கட்டணம் செலுத்தலாம்' என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஒன்பது பகிர்மான மண்டலங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்தின் தாழ்வழுத்த மின் நுகர்வோர், தாங்கள் சார்ந்த மண்டலத்திற்குள் உள்ள, எந்த பிரிவு அலுவலகத்தில் வேண்டு மானாலும், மின் கட்டணம் செலுத்தும் வசதி, 2008 முதல், நடைமுறையில் உள்ளது.

மின் வளர்ச்சி:

தற்போது, மின் தொடர் மூலமாக ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக மின் இழப்புகளை கண்டறிய, 'மறுசீரமைக்கப்பட்ட முடுக்கிவிடப்பட்ட மின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த திட்டம் (ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி.,)' என்ற திட்டம் மூலம், புதிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், தமிழகத்தில், 30 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட, 110 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மின் கட்டணம் செலுத்தும் சேவை உட்பட, நுகர்வோர் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும், ஒருங்கிணைக்கப்படும். இதனால், இந்த திட்டத்தின் கீழ் வரும் நகரங்களில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மண்டலத்தில் எங்கு வேண்டுமானாலும், மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிமாக நிறுத்தப்படும்.

110 நகரங்கள்:

இத்திட்டத்தின் கீழ் வரும், மின் நுகர்வோர், மின் கட்டணத்தை, 110 நகரங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் செலுத்தும் வசதி வழங்கப்படும். அதே நேரத்தில், இத்திட்டத் தின் கீழ் வராத, பிரிவு அலுவலகங்களில், மின் கட்டணத்தை செலுத்த இயலாது. இவற்றை சார்ந்த மின் நுகர்வோர், பழைய படியே மண்டலத்திற்குள் எங்கும், மின் கட்டணத்தை செலுத்தலாம். இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள, எந்த பிரிவு அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். இத்துடன், தற்போது, பயன்பாட்டில் உள்ள இணைய தளம், வங்கிகள், அஞ்சலக அலுவலகம் மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதியும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post