புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்.

பிளஸ்2தேர்வு மார்ச்3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார்8லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின்


சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் விடைத்தாள் அச்சிடப்படுகிறது.

ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைத்தாள்அச்சிடப்படுகிறது. இந்த விடைத்தாளில் முகப்புத் தாள் 3பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் மாணவர்கள் பெயர்,பதிவு எண்,தேர்வு எழுத வேண்டிய பாடம்,பள்ளி,தேர்வு நடக்கும் தேதி ஆகியவை அச்சிட்டே வழங்கப்படும்.மாணவர்கள் எதுவும் நிரப்பத் தேவையில்லை. மேலும்,மாணவர்களுக்கான பகுதியில்3கட்டங்கள் இடம் பெறுகிறது. அதில் தேர்வு எழுத வந்தாரா,இல்லையா,முறைகேடு செய்தாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தேர்வு அறை மேற்பார்வையாளர் பூர்த்தி செய்வார். இது தவிர தலைமை கண்காணிப்பாளர்,அறை மேற்பார்வையாளர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். அடுத்த இடத்தில் மாணவர் கையொப்பம் மட்டும் போட வேண்டும்.

மேலும்,மாணவரின் போட்டோ அதில்இடம் பெற்று இருக்கும். அடுத்துள்ள கீழ் பகுதியில் விடைத்தாள் திருத்திய பிறகு மதிப்பெண் போட்டது குறித்து குறிப்பிட வேண்டிய கட்டங்கள் இடம் பெறுகின்றன.விடைத்தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ள மேல்பகுதி,கீழ்ப்பகுதி ஆகியவைதேர்வுத் துறையால் கிழிக்கப்பட்டு,பின்னர் டம்மி எண்கள் போட்டு விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவார்கள். இதன் மூலம் விடைத்தாளில்எந்த குழப்பமும் வராது. மாணவர்களும் நினைவு மறதியாக எதை மாற்றி எழுதிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விடைத்தாளில் முகப்பில்3இடங்களிலும் ரகசிய குறியீடுகள் இடம் பெறுகின்றன.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post