பிஎப் சந்தாதாரர்களுக்கு ‘நிரந்தர கணக்கு எண்’ வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு பிஎப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பிஎப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒருநிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பிஎப் கணக்கு எண்ணும் மாற்றப்படும்.
இதனால் அந்த தொழிலாளிக்கும் நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பிஎப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பிஎப்சந்தாதாரர்கள் அனைவருக்கும் நிரந்தர கணக்கு எண் வழங்கட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, பிஎப் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மத்தியஅறக்கட்டளை வாரிய (சிபிடி) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொழிலா ளர் அமைச்சக செயலாளர் கவுர்குமார் உத்தரவிட்டதாக பிஎப் வட்டாரங்கள் தெரிவித்தன. நிரந்தர கணக்கு எண் வழங்கும் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும் என்று பிஎப் ஆணையர் கே.கே.ஜலாலை தொழிலாளர் துறை செய லாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தை 2014 2015ம் ஆண்டில் செயல்படுத்துவதில் எந்த சங்கட மும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எக்ஸ்ட்ரா தகவல்:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நாடு முழுவதும் சுமார்5 கோடி தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர்.
Tags
Latest News