ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் தனி யார் பள்ளிகளில் பணியாற் றிய பெரும்பாலான ஆசிரியர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்களின் மாணவர் சேர்க்கை பாதிக் குமோ என்ற கலக்கத் தில் உள்ளனர்.
தமிழகத்தில் 2012-13ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 21,737 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் ஆசிரியர் தகுதித்தேர்வின் தேர்ச்சி விகி தத்தை 55 சதவீதம் குறைப்பதாக தமி ழக அரசு அறிவித்தது. இத னால் தேர் வெழுதி தகுதி பெறாத 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு செய்ததால் தனியார் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். எனவே பணி நியமனத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளுக்கு பணியில் சேர்ந்து விடுவார் கள். ஆசிரியர்களின் இந்த பணி மாறுதலால் பொதுத்தேர் வை சந்திக்கவுள்ள 10,12ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பள்ளியின் தரத்தை உயர்த்தவும், பொதுத்தேர் வில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெறுவதற்கு தனியார் பள்ளிகள் ஆண்டு முழுவதும் தீவிர முயற்சி எடுக்கின்றன.
அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ள சூழலில் ஆசிரியர்களின் பணி நியமனம் தனியார் பள்ளிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகி கள் மாணவர்க ளின் தேர்ச்சி விகிதத்திலும், அதிக மதிப்பெண் பெருவ தில் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணி வருகின்றனர்.
மேலும், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் சேரும்போது இங்குள்ள தரம் அரசுப்பள்ளிகளி லேயே கிடைக்கும் சூழலும் ஏற்படுவதால் பெற்றோர் மனநிலை மாறிவிடுமோ என்ற அச்சமும் தனியார் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள் ளது.
இதனால் வரும் கல்வியாண்டில் சேர்க்கை விகி தம் பாதிக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண்ணையும் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர் களையும் வைத்து ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
தற் போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு அரசுப்பள்ளிகளில் சேர்வ தால் தனியார் பள்ளிகளு க்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
Tags
TET News