"வெயிட்டிங் லிஸ்ட்' முன்பதிவு ரயில் டிக்கெட், "கன்பார்ம்' ஆகும் போது, முன்பதிவு செய்தவரின், மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை, ரயில்வே துறை, விரைவில் செயல்படுத்த உள்ளது.
ரயில்களில் பயணம் செய்ய, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பெரும்பாலான நேரங்களில், "வெயிட்டிங் லிஸ்ட்' டிக்கெட் கிடைக்கிறது. இதனால், பயண நேரம் வரை, அந்த பயணிக்கு, தன் டிக்கெட், கன்பார்ம் ஆகியுள்ளதா என்பதை அறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்கான, ரயில்வே விசாரணை எண், "139' அல்லது ரயில்வே இணையதளத்தை, அந்த பயணி அணுக வேண்டி உள்ளது.
அதற்குப் பதிலாக, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட், கன்பார்ம் ஆகும் போது, தானாகவே, அந்த விவரத்தை, மொபைல் போன், எஸ்.எம்.எஸ்., செய்தியாக, முன்பதிவு செய்தவருக்கு அறிவிக்கும் வசதியை, ரயில்வே துறை, விரைவில் செயல்படுத்த உள்ளது. இந்த தகவலை, ரயில்வே உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
மொபைல் போன் மூலம், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, இந்த சேவையை, அந்த இணையதளம், ஏற்கனவே வழங்கி வருகிறது. இத்தகைய சேவையை, அனைத்து டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கும் வழங்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
Tags
Latest News