தேசிய வருவாய் வழிப்படிப்பு உதவித்தொகை திட்ட (என்.எம்.எம்.எஸ்.,) சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பித் தோருக்கு அந்தந்த அரசுபள்ளி தலைமை ஆசிரியர்களே இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்களை எடுத்து வழங்க வேண்டும் என,
தேர்வுத்துறை கூறியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் தற்போது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் பிளஸ் 2 வரை மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வு பிப்.22ல் நடக்கிறது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படாது.அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கியுள்ள ரகசிய குறியீட்டுமூலம்www.dge.inஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பிப்.20 க்குள் ஹால் டிக்கெட்களை டவுன் லோடு செய்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்படுகிறது.
20ந்தேதிக்கு பின் ஆன்-லைனில் ஹால் டிக்கெட் எடுக்க முடியாத நிலை ஏற்படும் என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Tags
kalvi news