முதலில் மாண்புமிகு தமிழக அமைச்சர் 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார்கள்.
பின்னர் சட்டமன்றத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் பணிநியமனம் புதிதாக நடைபெறும் என்று அறிவித்தார்.
அவர் அவ்வாறு அறிவித்தவுடன் பல பத்திரிகைகளில் ஜுலை மாதம் 30 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று செய்தி வெளியானது.
ஜுலை மாதம் 30 ஒய்ந்தது.
ஜுலை மாதம் 31 மாய்ந்தது.
எனவே ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வெளியாகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
ஆகஸ்ட் முதல் தேதி முடிந்து விட்டது.
இனி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால் என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியுமா?
1. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி 5% மதிப்பெண் தளர்வு வழக்கு டிவிஷனல் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது என்று கூறுவார்கள்.
2. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கு விசாரணை இருக்கிறது என்று கூறுவார்கள்.
3. ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெய்டேஜ் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இருக்கிறது என்று கூறுவார்கள்.
4. அப்படி எதுவும் கூற விரும்பவில்லை என்றால் வழக்கப்படி விரைவில் வரும் என்று கூறுவார்கள்.
பார்ப்போம் இனி என்ன சொல்ல போகிறார்கள் என்று...
முகநூலிருந்து ராப் ராகேஷ்
Source : TN Kalvi
Source : TN Kalvi
Tags
TRB NEWS