கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள்.


தெரிவுப் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.அதோடு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும் வாழ்த்துக்கள்.

ஏற்கனவே DTED படிப்பதற்காக கலந்தாய்வில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு இதைப் பற்றிய முன்னறிவு இருக்கும் அதே நேரத்தில் கலந்தாய்வு குறித்து மேலும்  சில விளக்கங்களை  எழுதுவது  நாளை கலந்தாய்விற்கு செல்லும் PG நண்பர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் சிறிது தெளிவை உண்டாக்கும் என நினைக்கிறேன்.

1) கலந்தாய்வு தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் onlineவாயிலாக நடைபெறும்.கலந்தாய்வு நடைபெறும்இடத்திற்கான பட்டியல்http://questionschool2u.blogspot.in/2014/08/tet-pgtrb-counseling.htmlஎன்ற வலைத்தள முகவரியிலுள்ளது.

2) BV இடம் பெற்றவருக்கு முதலில் அதனை தொடர்ந்தே CV இல் இடம்பெற்றவருக்கு பின்பும்பள்ளியைத் தேர்ந்தெடுப்பதாற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது தவறு.கலந்தாய்வில் மாவட்ட அளவில் weightage தரவரிசை அடிப்படையிலேயே நடைபெறும்.

3)  விண்ணப்பத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள நிரந்தர முகவரிக்கு உரிய மாவட்டத்திலேயே உங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

4) நீங்கள் உங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளியைத்  தேர்ந்தெடுக்க விரும்பவில்லையென்றால் பிற மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்க மறுநாள் வாய்ப்பு அளிக்கப்படும்.

5) கலந்தாய்விற்கு செல்லும் பொழுது தேர்வு நுழைவுச் சீட்டு( Exam hall ticket), சான்றிதழ் சரி பார்த்தலுக்கான அழைப்பு கடிதம்(CV call letter), தெரிவுப் பட்டியலில் இடம் பெற்றதற்கான சான்ற( selection list copy of you),உண்மை சான்றிதழ்கள்.( original certificates) மற்றும் சிறிய அளவிலான புகைபடங்கள்(passport size photo)கொண்டு செல்லுதல்  உதவிகரமாக அமையும்.

6)மேலும் பிற மாவட்டத்தினை தேர்வு செய்ய இருப்போர் கையில் தமிழக வரைபடமும்,மாவட்ட வாரியாக தெரிந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

7)கலந்தாய்வு போது Computer முன் உங்களுக்கான இடத்தினை காண்பித்து உடனாடியாக தேர்ந்தெடுக்க நேரிடும்.எனவே முன்னதாகவே 2,3 மாவட்டங்களை தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

8)கலந்தாய்வு போது உடன் ஒருவரை அழைத்துச்செல்லலாம் எனவே பதட்டம் இன்றி உங்களுக்கான சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள்.

வழக்குகளின் நிலை.
வரும் 01/09/2014 திங்கள் கிழமையன்று அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது.ஆனால் அவ்வழக்கினால் எவ்வித மாற்றமும் வராது என இறைவன்மீது நம்பிக்கை கொள்வோம்.

தேர்ந்தெடுத்த பள்ளியில் உங்களது முழுத்திறமையினையும் காட்டுங்கள்.மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.பணிசிறக்க கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post