TET & PGTRB Counseling:ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?



ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும்.

கலந்தாய்வு நடைபெறும் இடம்ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகத்தால் அறிவிக்கப்படும்.(click here counseling place)காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்கஇருப்பதால்,
கலந்தாய்வில் கலந்து கொள்ளஇருக்கும் அனைவரும் காலை 7.30மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு :

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும்போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ளகாலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள்பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும்இதுதான் நடைமுறை).மாவட்டத்தில் உள்ளகுறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ளதேர்வர்கள், வரிசைகிரமமாகநிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள்அனைவரும் கலந்தாய்வு நடைபெறும்அறைக்குள்அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள்.

(குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்உடன் செல்லும் மற்ற நபர்கள்கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்அனுமதிக்கப்படமாட்டார்கள்.எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்ததயாராக இருக்கவும்)பாடவாரியாகஅழைக்கப்பட்ட தேர்வர்கள் தரவரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ளஇடத்தில் தங்களுக்கு தேவையானஇடத்தை தேர்ந்தெடுக்கஅறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள்அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும்அக்குறிப்பிட்ட நேரத்தில்அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண்இட்டு தயாராக எடுத்து சென்றால்,முதலாவது இடம் இல்லாவிட்டால்இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்கஇயலும்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணைவழங்கும்முன் மீண்டும்ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாகஅறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும்அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம்என அனைத்தையும் தயாராககொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநிலபட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள்மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும்.கலந்தாய்வு நடைபெற்றுகொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாகமுடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்தபள்ளியில் தாங்கள் பணிபுரிய உரியஆணை வழங்கப்படும். எனவே தேவையானதண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும்கொண்டு செல்லவும்.

வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -தங்கள் சொந்தமாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம்தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில்அடுத்த நாள் நடைபெறும்வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில்கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள்பணி பெறகலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதேஇடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள்பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால்முறைப்படி அறிவிக்கப்படும்).

வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும்போது, மாநில அளவில் தங்கள் தர எண்பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண்(From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும்கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.தங்களுக்கான காலிப்பணியிடங்கள்கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும்.(Scroll Down Type)தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில்எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில்அவர் தனக்கு தேவையானஇடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர்தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்டபிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்தமாவட்டத்தில்உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும்.இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும்போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்கஇயலும். மாவட்டத்திற்குள்கலந்தாய்வு நடைபெறும்போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்டநேரத்தை விடவேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்குமிக குறைந்த நேரமே வழங்கப்படும்.எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.

பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?

தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.

1. பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
2. பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான போக்குவரத்து வசதி.
3. பள்ளி மற்றும் கிராம சூழல்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post