மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம் : ஆசிரியர் கூட்டமைப்பு தகவல்


           தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் அவற்றை மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் பாலசந்தர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி சங்க நிறுவனர் மாயவன் ஆகியோர் கூறியதாவது: கல்வி உரிமை சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. 
 
          6 வயது முதல் 14 வயது வரை உள்ள கல்வி உரிமை சட்டத்தை, குழந்தை பிறந்தது முதல் 16 வயதுவரை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின் மொத்த வருமானத்தில் 6 சதவீதத்தையும், மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதத்தையும்,ஒவ்வொரு மாநில பட்ஜெட்டிலும் 30 சதவீதத்தை கல்விகாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். கல்வித்துறையில் தொகுப்பூதியம், பகுதி நேரவேலையை ஒழித்து, காலமுறை ஊதியம் அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர், மாணவர்கள் விகிதாச்சாரம் 30:1 என்ற விகித்தில் கொண்டு வர வேண்டும். பல பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார். அவர் 25 பாடங்களை எடுக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் சிறுமலை வேளாண் பண்ணை, பழநியில் மீனாட்சிநாயக்கன்வலசு உட்பட 10 பள்ளிகள் மாணவர்கள் வராததால், மூடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதால் மூடப்படும் நிலையில் உள்ள 1600 பள்ளிகளின் பெயர் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post