வெயிட்டேஜ்' முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, பட்டதாரி ஆசிரியர்களின் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டும், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்ணாவிரதத்தை கைவிட்டு, நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவிப்பு வெளியிட்டது.
எனவே, கடந்த 3ம் தேதி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை, அணுகினோம். உடனடியாக, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கு தொடர அறிவுறுத்திய முதல்வரே, மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது வருத்தப்பட வைக்கிறது. கோவையில், 900 பட்டதாரி மற்றும் 610 இடைநிலை ஆசிரியர்கள் என, 1,510 பேரின் குடும்ப ஓட்டுகளையும், பா.ஜ.,கட்சியின் மேயர் வேட்பாளரான, நந்தகுமாருக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
TET News