இன்று ஆசிரியர் தினம்: 377 பேருக்கு விருது - தினகரன்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5ம் தேதி. அவரது பிறந்தாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேத்துப்பட்டு எம்சிசி மேனிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி விழாவில் கலந்து கொண்டு, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில் சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குகிறார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார்.

அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் திட்ட இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் நன்றி தெரிவிக்கிறார். இந்த விழாவில் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த 171 ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த 206 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதில் ரொக்கம் ரூ.5000, வெள்ளியாலான பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post