டெட் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று 14ஆம் நாள்போராட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள்கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகதேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிராக கூடி கோஷமிட்டனர்.பிறகு தமிழக தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் சென்று, அங்கு இருந்த அதிகாரிகளிடம் ”வெயிட்டேஜ் முறை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு” தெரிவிக்கும் பொருட்டு தங்கள் தேர்தல் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ”வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் வழங்கியது என்பதால் அங்கு சென்று தான் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து டெட் தேர்வர்கள் பேரணியாக இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்ல துவங்கினர். அப்போது காவல்துறை பேரணி செல்ல முறையாக அனுமதி பெறப்படாததால் தேர்வர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்டும், தங்கள் கண்களை கருப்பு துணியால் கட்டியவாறும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில் போராடுபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் லேசான தடியடி நடைபெற்றது. இதில் தேர்வர்கள் அணிந்து வந்த துணிகள் கிழிந்து காயம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வர்கள் திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. மணி அவர்கள் திருமண மண்டபத்தில் தேர்வர்களை சந்தித்து ”தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு” என கூறி ஆறுதல் வழங்கினார். தற்போது 7 மணி அளவில் தேர்வர்கள் விடுவிக்கப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர். நாளை மீண்டும் 15ஆம் நாள் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Tags
TET News