வெயிட்டஜ் முறைக்கு எதிர்ப்பு.5 பேர் விஷம் குடிப்பு.

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் இன்று பேரணி நடத்தினர்.


ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், வெயிட்டேஜ் முறையால் ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் ஏற்படும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.

                                                                                

ஆசிரியர் பணி நியமனத்திற்கு 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்வு முடிவுகள் ஆகியவற்றை உட்படுத்தும் வெயிட்டேஜ் முறை அவசியமற்றது எனவும் அவர்கள் கூறினர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆம் வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முறை வேறு என்றும், தற்போது இருக்கும் விடைத்தாள் திருத்தும் முறை வேறு எனவும் அவர்கள் குறை கூறினர்.

 ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மதிப்பீட்டு முறை என்பது வேறு என்றும், அனைவரையும் வெயிட்டேஜ் முறையின் கீழ் கொண்டு வருவது பொருத்தமற்றது எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

வாசகர்களுக்கு வணக்கம்,


தாங்கள் வழங்கும் Comment - களை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பார்வையிடுகின்றனர். எனவே வருங்கால ஆசிரியர்களும் இந்த பொறுப்பை உணர்ந்து நாகரீகமாகவும், யாருடைய மனதையும் வருத்தப்படவைக்காத வகையிலும் தங்கள் Comment - களை வழங்கவும்.

- அன்புடன் QUESTIONSCHOOL

Previous Post Next Post